(நபியே!) அந்த ஊர்கள், - அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (எடுத்துக் கூறி) விவரிக்கிறோம். இன்னும், அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்தனர். எனினும், முன்னர் அவர்கள் எதை பொய்ப்பித்து விட்டார்களோ அதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.