அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; இன்னும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்படுகிறோம்.” அதற்கு (மூஸா) கூறினார்: “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கக்கூடும். ஆக, நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (-நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்.”