ஆக, அவர்களுக்கு இன்பம் வந்தால் இது எங்களுக்கு (வரவேண்டியதுதான்) என்று கூறுவார்கள். ஒரு துன்பம் அவர்களை அடைந்தால் “மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அறிந்து கொள்ளுங்கள்! “அவர்களுடைய துர்ச்சகுணமெல்லாம் அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துதான் நடக்கிறது.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கிறது என்பதை) அறியமாட்டார்கள்.”