அவர்கள் மீது தண்டனை நிகழ்ந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்த பிரகாரம் (அதை நிறைவேற்றக் கோரி) - எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு தண்டனையை நீர் நீக்கினால் உம்மை நிச்சயம் நம்பிக்கை கொள்வோம்; இன்னும், இஸ்ரவேலர்களை உம்முடன் நிச்சயம் அனுப்புவோம்.”