இன்னும், இஸ்ரவேலர்களை கடலைக் கடக்க வைத்தோம். ஆக, தங்கள் சிலைகளுக்கருகில் (அவற்றை வழிபடுவதற்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். (அதை பார்த்துவிட்டு) கூறினார்கள்: “மூஸாவே! வணங்கப்படும் கடவுள்(சிலை)கள் அவர்களுக்கு இருப்பது போல் வணங்கப்படும் ஒரு கடவுளை (-ஒரு சிலையை) எங்களுக்கும் ஏற்படுத்து!” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தை) அறியாத மக்கள் ஆவீர்கள்.”