இன்னும், (படைக்கப்பட்ட) ஒவ்வொரு பொருளிலிருந்து (அறிய வேண்டிய படிப்பினையையும்) அறிவுரையையும் (அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் தொடர்பான) ஒவ்வொன்றின் விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீர் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்ல(மாகிய நரக)த்தை உங்க(ளில் யார் எனக்கு மாறு செய்கிறார்களோ அவர்)ளுக்குக் விரைவில் காண்பிப்பேன்.”