Quran Quote  :  Surely forgiveness and a mighty reward await those who fear Allah without seeing Him. - 67:12

குரான் - 7:157 சூரா அல்அராஃப் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَـٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُواْ ٱلنُّورَ ٱلَّذِيٓ أُنزِلَ مَعَهُۥٓ أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியாகிய இத்தூதரை பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள். அவர்களுக்கு நன்மையை அவர் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார்; இன்னும், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; இன்னும், கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார்; இன்னும், அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட (குர்ஆன் என்ற) ஒளியை பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

Sign up for Newsletter