Quran Quote  :  Surely Allah stands in no need of anyone in the whole Universe. - 29:6

குரான் - 7:187 சூரா அல்அராஃப் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

(நபியே!) மறுமையைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடம்தான் இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் அதை அவன்தான் வெளிப்படுத்துவான். அது, வானங்களிலும் பூமியிலும் (யாராலும் அதை அறியமுடியாதவாறு) கனத்து விட்டது (-மறைவாக இருக்கிறது). திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும், மக்களில் அதிகமானோர் (மறுமையின் அறிவு அல்லாஹ்விடம்தான் இருக்கிறது என்பதை) அறிய மாட்டார்கள்.”

Sign up for Newsletter