ஆதமின் சந்ததிகளே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கின்ற ஆடைகளையும் (உங்களை அழகுபடுத்தக் கூடிய) அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு படைத்தோம். இறை அச்சத்தின் ஆடை, அதுதான் மிகச் சிறந்தது. இவை, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (இவற்றை நாம் அவர்களுக்கு விவரிக்கிறோம்)!