“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம். ஆக, உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும்” என அறிவிப்பார்!