இன்னும், அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். இன்னும், (சொர்க்கத்தின் உயரமான சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தை வைத்து அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை நோக்கி “உங்கள் மீது ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள். (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்களோ (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.