இன்னும், சிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(களும் உங்கள் கூட்டங்களு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்.