(சிகரவாசிகளை சுட்டிக் காண்பித்து) “அவர்களை அல்லாஹ் (தன்) கருணையினால் அரவணைக்க மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தது இவர்கள்தானா?” (என்று பெருமையடித்து மறுத்தவர்களிடம் அல்லாஹ் கேட்பான். பிறகு,) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள். உங்கள் மீது பயமில்லை. நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்” (என்று சிகரவாசிகளுக்கு அல்லாஹ் கூறுவான்.)