அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த முக்கிய பிரமுகர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” (நம்பிக்கை கொண்டவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள் ஆவோம்.”