பிறகு, (மூன்றாவது தலாக் கூறி) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவனல்லாத (வேறு) ஒரு கணவனை அவள் மணம் புரியும் வரை. (அப்படி மணம் புரிந்து, பிறகு) அவனும் அவளை விவாகரத்து செய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் முதல் கணவரும் இவளும் இந்த) இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று எண்ணினால் இவ்விருவரும் மீண்டும் திருமணம் செய்வது இவ்விருவர் மீது அறவே குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறி(ந்து அமல் செய்)யும் மக்களுக்காக அவற்றை அவன் விவரிக்கிறான்.