(நபியே! நீர் எவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கிறீர்களோ) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது கடமை அல்ல. (உம்மீது நேர்வழியின் பக்கம் அழைப்பதுதான் கடமை.) என்றாலும், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாகும். இன்னும், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். இன்னும், (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.