क़ुरआन -2:273 सूरत अनुवाद, लिप्यंतरण और तफसीर (तफ्सीर)).

لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ

(கல்வி கற்பதற்காக அல்லது ஜிஹாது செய்வதற்காக) அல்லாஹ்வின் பாதையில் முற்றிலும் அடைக்கப்பட்ட ஏழைகளுக்கு (உங்கள் தர்மங்களை கொடுப்பது மிக ஏற்றமானதாகும்). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க சக்திபெற மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (-கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்,) நீர் அவர்களை அவர்களின் (முகம் அல்லது ஆடை, அல்லது இருப்பிடத்தின்) அடையாளத்தால் (அவர்கள் தேவையுடையோர் என) அறியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அ(தையும் அதன் நோக்கத்)தை(யும்) நன்கறிந்தவன் ஆவான்.

Sign up for Newsletter