அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட) அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள்.