உமக்கு முன்னர் எந்த ஒரு ரஸூலையும் நபியையும் நாம் அனுப்பினால், அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை நுழைத்துக்) கூறாமல் இருந்ததில்லை. பின்னர், ஷைத்தான் (நபியின் ஓதுதலுக்கு இடையில் நுழைத்துக்) கூறியதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு, அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (நபியின் ஓதுதலில் ஷைத்தான் நுழைத்ததை அல்லாஹ் நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.