அது, (நம்பிக்கையாளர்கள் சொர்க்கம் செல்வது அல்லாஹ்வின் வெகுமதியாகும்). இன்னும், எவர் தான் தண்டிக்கப்பட்டதைப் போன்று (தன்னைத் தண்டித்தவரை) தண்டித்தாரோ, பிறகு, அவர் மீது (மீண்டும்) வன்முறை செய்யப்பட்டதோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் பிழை பொறுப்பாளன் ஆவான்.