அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.