அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.