தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. இன்னும், அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.