(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.