குரான் - 24:21 சூரா அந்நூர் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

۞يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ

நம்பிக்கையாளர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுவாரோ நிச்சயமாக அ(ந்த ஷைத்தானான)வன் அசிங்கமான செயல்களையும் கெட்டதையும் (தன்னை பின்பற்றுவோருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்க மாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

அந்நூர் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter