கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். இன்னும், நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அ(ந்த நல்ல)வர்கள் (பாவிகளாகிய) இவர்கள் சொல்வதிலிருந்து நிரபராதிகள் ஆவார்கள். அவர்களுக்கு மன்னிப்பும் (சொர்க்கம் எனும்) கண்ணியமான அருட்கொடையும் உண்டு.