ஆக, அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். இன்னும், “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.