நிராகரிப்பாளர்கள் - அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். (தாகித்தவர்) அதை தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை அறவே (அங்கு) காணமாட்டார். இன்னும், அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். ஆக, அவன் அவருடைய கணக்கை அவருக்கு முழுமையாக நிறைவேற்றுவான். இன்னும், கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.