எவர்கள் பத்தினிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துவார்களோ, பிறகு, அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லை என்றால் அவர்களை எண்பது பிரம்படி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்) ஆவார்கள்.