குரான் - 24:43 சூரா அந்நூர் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ

(நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு) ஓட்டுகிறான். பிறகு, அவற்றுக்கு இடையில் இணை(த்து ஒன்று சேர்)க்கிறான், பிறகு, அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆக, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். இன்னும், வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் அவன், தான் நாடியவர்களை தண்டிக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிடவும் நெருங்கி விடுகிறது.

அந்நூர் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter