அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். ஆக, தனது வயிற்றின் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், இரண்டு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், நான்கு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. அல்லாஹ், தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.