அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்விற்கே சொந்தமானவையாகும். திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிவான். இன்னும், (நபியின் கட்டளைக்கு மாறுசெய்த) அவர்கள் அந்நாளில் அவனிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது, ஆக, அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.