குரான் - 13:4 சூரா அர்ரஅத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

وَفِي ٱلۡأَرۡضِ قِطَعٞ مُّتَجَٰوِرَٰتٞ وَجَنَّـٰتٞ مِّنۡ أَعۡنَٰبٖ وَزَرۡعٞ وَنَخِيلٞ صِنۡوَانٞ وَغَيۡرُ صِنۡوَانٖ يُسۡقَىٰ بِمَآءٖ وَٰحِدٖ وَنُفَضِّلُ بَعۡضَهَا عَلَىٰ بَعۡضٖ فِي ٱلۡأُكُلِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

மேலும், பூமியில் ஒன்றுக்கொன்று சமீபமான பகுதிகள் உள்ளன. (ஆனால், அவை தன்மைகளால் மாறுபட்டவை ஆகும்.) இன்னும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், ஒரே வேரிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முளைக்கின்ற பேரீச்சமும்; இன்னும், ஒரு வேரிலிருந்து ஒரே ஒரு மரம் முளைக்கின்ற பேரீச்சமும் உள்ளன. இவை (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகின்றன. ஆனால், அவற்றில் சிலவற்றை, சிலவற்றைவிட சுவையில் சிறப்பிக்கிறோம். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும்) அத்தாட்சிகள் இருக்கின்றன.

அர்ரஅத் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter