குரான் - 9:118 சூரா அத்தௌபா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ,

இன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாக ஆகியது. இன்னும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்கள் நெருக்கடியாக ஆகியது. இன்னும், அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி(யாக அறிந்து) கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.

அத்தௌபா அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter