இன்னும், “அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல(தை செவியுறுகின்ற) காது ஆவார். அவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார். இன்னும், நம்பிக்கையாளர்க(ள் கூறும் செய்திக)ளை ஏற்றுக் கொள்கிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கருணையாக இருக்கிறார்.” இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் தூதரை இகழ்கிறார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.