பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். இன்னும், (போருக்கு சென்றவர்களை நோக்கி) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே!