Quran Quote  :  Did the unbelievers (who do not accept the teaching of the Prophet) not realize that the heavens and the earth were one solid mass - 21:30

குரான் - 43:32 சூரா அழ்சுக்குருப் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

أَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்.

அழ்சுக்குருப் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter