இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்).