குரான் - 40:67 சூரா அல் காபிர் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும்; பிறகு, இந்திரியத்திலிருந்தும்; பிறகு, இரத்தக் கட்டியிலிருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும்; பிறகு, நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகிறான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும், ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்தது மட்டுமல்லாமல், தான் படைத்த விதத்தையும் உங்களுக்கு விவரிக்கிறான்).

அல் காபிர் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter