அவன் வானங்களை - நீங்கள் பார்க்கும்படியான தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான், அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங்களையும் பரப்பினான். இன்னும், நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்.