குரான் - 12:65 சூரா யூசுப் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَـٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ

மேலும், அவர்கள் தங்கள் மூட்டையை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (உணவும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். இன்னும், எங்கள் சகோதரனையும் பாதுகாப்பாக அழைத்து (சென்று, பாதுகாப்பாக அழைத்து) வருவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக வாங்கிவருவோம். இது (அதிபருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினார்கள்.

யூசுப் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter