குரான் - 5:4 சூரா அல்மாயிதா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

அவர்கள் தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நல்ல உணவுப் பொருட்கள்; இன்னும், (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள். வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காக (-உங்களுக்காக வேட்டையாடி) தடுத்துவைத்தவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். (அவற்றை வேட்டையின் மீது ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கிடுவதில் மிகத் தீவிரமானவன் ஆவான்.

அல்மாயிதா அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter