بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَـٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
يَٰبَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக (அக்கால) உலக மக்களைவிட நான் உங்களை மேன்மையாக்கியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது. இன்னும், அதனிடமிருந்து மீட்புத் தொகை (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. இன்னும், பரிந்துரை அதற்குப் பலனளிக்காது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
۞وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّـٰلِمِينَ
இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.”
وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
இன்னும், இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வாயாக: “என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனி(வகை)களிலிருந்து உணவளி!” (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “எவர் நிராகரிப்பாரோ அவரை சிறிது (காலம்) சுகமனுபவிக்க வைப்பேன். பிறகு, நரக தண்டனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். இன்னும் அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.”
وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
இன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.”
رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
“எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்கு முழுமையாக பணிந்தவர்களாகவும் எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு முழுமையாக பணிந்து நடக்கின்ற சமுதாயத்தை ஆக்கு! இன்னும், எங்கள் ஹஜ் கிரியைகளின் இடங்களை(யும் அங்கு நாங்கள் செய்ய வேண்டிய அமல்களையும்) எங்களுக்குக் காண்பித்துக் கொடு! இன்னும், எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.”
رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
இன்னும், “எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பு! அவர் உனது வேத வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். இன்னும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து கொடுப்பார். இன்னும், (தீய குணங்களில் இருந்து) அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்.”
وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ
பெரிய மடையனாக இருப்பவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். இன்னும், மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில் இருப்பார்.