بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ
அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். இன்னும், அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்.
۞سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
“அவர்கள் எந்த கிப்லாவை நோக்கி (தொழுபவர்களாக) இருந்தார்களோ அவர்களின் அந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?’’ என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு நபியே! நீர்) கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.’’
وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٌۭ
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாளராக இருப்பதற்காகவும் (சிறந்த, நீதமான) நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தமது குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார் என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் (தொழுகையில் முன்னோக்குபவராக) இருந்த (பைத்துல் முகத்தஸ் ஆகிய முதல்) கிப்லாவை (விட்டு உம்மை திருப்பியதை) நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் எவர்களை நேர்வழி நடத்தினானோ அவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே (-பாரமாகவே) இருந்தது. உங்கள் நம்பிக்கையை (-முன்னர் நீங்கள் தொழுத தொழுகைகளை) அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்.
قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ
(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் பல முறை திரும்புவதை திட்டமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் பிரியப்படுகின்ற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம். எனவே, நீர் (தொழுகைக்கு நின்றால்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும் (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழும்போது) அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள், - “நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்’’ என - திட்டமாக அறிவார்கள். இன்னும் அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
இன்னும், (நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சிகளையும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் (தமது வழிபாட்டில்) உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களாக இல்லை. உமக்குக் கல்வி ஞானம் வந்த பின்னர் அவர்களுடைய ஆசைகளை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ
நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை (-மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் எல்லோருடைய கிப்லா என்பதை) அறிவார்கள். இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்த நிலையிலேயே (அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் கிப்லா என்ற) உண்மையை மறைக்கிறார்கள்.
ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ
இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே, நீர் சந்தேகிப்பவர்களில் ஆகிவிட வேண்டாம்.
وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதை முன்னோக்கக் கூடியவர் ஆவார். ஆக, நீங்கள் நன்மைகளில் (ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
இன்னும் (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இதுவோ உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மையாகும். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) - அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவும் - நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள்! என்னைப் பயப்படுங்கள்.