بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ
நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (அறவே எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சத்தியத்தை சிந்தித்து) புரியமாட்டார்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்.
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
அவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல என்று) தடுத்ததெல்லாம் (தாமாக) செத்த பிராணிகளும் இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கப்படும்போது) அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறப்பட்டதும்தான். ஆக, எவர் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்பதற்கு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது (அதிலிருந்து அவசியமான அளவு உண்பது) அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَـٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ
நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைக்கிறார்களோ; இன்னும், அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) சாப்பிடுவதில்லை. இன்னும், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும், அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ
அவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்?
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
அ(வர்கள் நரகத்தில் தண்டனை பெறுவ)து, ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கினான். (ஆனால், அவர்கள் அதில் முரண்பட்டார்கள்.) நிச்சயமாக (இந்த) வேதத்(தை நம்பிக்கை கொள்ளாமல் அ)தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (முஸ்லிம்களுடன்) வெகு தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள்.
۞لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَـٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّـٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ
நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (பழிக்குப் பழி கொல்ல வேண்டும்). எவருக்கு, தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (மீதமுண்டான பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் எல்லை மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَـٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
இன்னும் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு. நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயப்பட வேண்டுமே!
كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அப்போது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரண சாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.