بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
இன்னும், நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா முடியும்) தவணையை அடைந்தால் நல்ல முறையில் (மண வாழ்க்கையில்) அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து செய்து) நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களை (உங்கள் திருமண பந்தத்தில்) தடுத்து வைக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுக்காதீர்கள். இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவுகூருங்கள்! இன்னும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவில் வையுங்கள்! அவன் இவற்றின் மூலமாக உங்களுக்கு உபதேசிக்கிறான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
இன்னும், நீங்கள் பெண்களை (மூன்றுக்கும் குறைவாக) விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா) தவணையை (முழுமையாக) அடைந்தால், (அதன் பின்னர் அந்த பெண்களும் அவர்களின் கணவர்களும் மண வாழ்க்கையில் இணைய விரும்பி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவர் மீது) திருப்தியடைந்தால் அப்போது அந்தப் பெண்களை - அவர்கள் தங்கள் (முந்திய) கணவர்களை மணந்து கொள்வதிலிருந்து - (அவர்களின் பொறுப்பாளர்களாகிய) நீங்கள் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் மிகப் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
۞وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
எவர் பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (-குழந்தையின் உரிமையாளராகிய பிள்ளையின் தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும், எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவரும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசுதாரர் மீதும் (கடமையாகும்). அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த விரும்பினால் அது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால், - நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் (பாலூட்டும் தாய்க்குரிய கூலியை) ஒப்படைத்தால் - (அது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதை அறியுங்கள்.
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
இன்னும், உங்களில் எவர்கள் இறப்பார்களோ; இன்னும், மனைவிகளை விட்டுச் செல்வார்களோ அந்த மனைவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவதை) எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள் தங்கள் (இத்தாவின் இறுதி) தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ
இன்னும், அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (மணமுடிக்க) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக (திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன் தவணையை அடையும் வரை (அப்பெண்களுடன்) திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறியுங்கள். ஆகவே, அவனைப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.
لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ
பெண்களை - அவர்களை நீங்கள் தொடாமல் (-உடலுறவு வைக்காமல்) இருக்கும்போது; அல்லது, அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - நீங்கள் விவாகரத்து செய்தால் (அது) உங்கள் மீது அறவே குற்றமில்லை. அவர்களுக்கு (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு) நல்ல முறையில் பொருள் கொடுங்கள். (தலாக் செய்த) செல்வந்தர் மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் செய்த) ஏழை மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு பொருளை அன்பளிப்பு செய்வது) கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.
وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
இன்னும், அவர்களுக்கு ஒரு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு (-உடலுறவுக்கு) முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் (-மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (-கணவன்) மன்னித்தால் தவிர. (மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம். அல்லது, கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம்.) ஆயினும், (ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு மஹ்ரையும் கொடு)ப்பது இறை அச்சத்திற்கு மிக நெருக்கமா(ன செயலா)கும். உங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவருக்கு) உதவுவதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ
(எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி பாதுகாத்து வழமையாக நிறைவேற்றி வாருங்கள். இன்னும், (தொழுகையில்) அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.
فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ
ஆக, நீங்கள் (ஓர் இடத்தில் நின்று தொழும்போது எதிரிகள் தாக்குவார்கள் என்று) பயந்தால், அப்போது நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்(து அருள் புரிந்)தது போன்று (தொழுகையிலும் அதற்கு வெளியிலும்) அல்லாஹ்வை (புகழ்ந்து நன்றியுடன்) நினைவு கூருங்கள்.
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
உங்களில் எவர்கள் மரணிக்கிறார்களோ, இன்னும் மனைவிகளை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்கும் (அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான) பொருள்களை (-செலவுகளை) வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆக, அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.