بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَـٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَـٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.
قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ
அவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
قَالَ يَـٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ
அவன் கூறினான்: “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, அவன் கூறினான்: “வானங்கள் இன்னும் பூமியில் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன். இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?”
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَـٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்.
وَقُلۡنَا يَـٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
இன்னும், நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள். (அப்படி நெருங்கினால்) அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்.”
فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
ஆக, ஷைத்தான் அவ்விருவரையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) மாறு செய்ய தூண்டி அதிலிருந்து அகற்றினான். ஆக, அவ்விருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான். இன்னும், நாம் கூறினோம்: “நீங்கள் இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவீர்கள். இன்னும், உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு.”
فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் தேட சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். (அவற்றைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்.) ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
இன்னும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
يَٰبَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّـٰيَ فَٱرۡهَبُونِ
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்.