بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ
இன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார். இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியிகள் - (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
இன்னும், உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி, உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். இன்னும், அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்.
ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ
பிறகு, அதன் பின்னர் புறக்கணித்து விட்டீர்கள். ஆக, உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்.
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
இன்னும், சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளைக்கு மாறு செய்து) எல்லை மீறியவர்களை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். ஆக, சிறுமைப்பட்டவர்களாக குரங்குகளாக ஆகிவிடுங்கள் என அவர்களுக்கு நாம் கூறினோம்.
فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
ஆக, அதை (-குரங்குகளாக மாற்றப்பட்டதை) அதற்கு முன்னால் (அவர்கள் செய்த) பாவங்களுக்கும் அதற்கு பின்னால் (வருபவர்கள் செய்கின்ற அது போன்ற) பாவங்களுக்கும் (முன்னுதாரணமான) தண்டனையாகவும், இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்.
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ
இன்னும், “ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்” என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கு) அவர்கள், “(மூஸாவே!) நீர் எங்களை கேலியாக எடுத்துக் கொள்கிறீரா?” எனக் கூறினார்கள். “அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என அவர் கூறினார்.
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ
“எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்” எனக் கூறினார்கள். “நிச்சயமாக அது கிழடும் அல்லாத, இளங்கன்றும் அல்லாத அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்” என (மூஸா) கூறினார்.
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று அவன் எங்களுக்கு விவரிப்பான்.” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு. அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது). பார்வையாளர்களை அது மகிழ்விக்கும்” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான்.
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ
(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் (பல வகைகளாக இருப்பதால் அவற்றில் எதை நாங்கள் அறுக்க வேண்டும் என்பதில் அவை) எங்களுக்கு குழப்பமாக (சந்தேகமாக) இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்.”