بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
அவ்வாறன்று! எவர்கள் தீமையைச் சம்பாதித்து, இன்னும் அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள் ஆவார்கள்! அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ
இன்னும், (யூதர்களே!) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை (-உதவி உபகாரம்) செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்” என்று (உங்கள் மூதாதைகளாகிய) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை) புறக்கணிப்பவர்கள் ஆவீர்கள்.
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ
இன்னும், நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று நாம் உங்களின் உறுதிமொழியை வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்கும் நிலையில் (அதை) ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தினீர்கள்.
ثُمَّ أَنتُمۡ هَـٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
(இவ்வாறு ஒப்பந்தத்தை நீங்கள் உறுதிப்படுத்திய) பிறகு, நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள். இன்னும், உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள். ஆனால், அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் மீட்புத் தொகை கொடுத்து அவர்களை மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? ஆக, உங்களில் அ(த்தகைய காரியத்)தைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான தண்டனையின் பக்கம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ
அவர்கள் எத்தகையோர் என்றால் மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கினார்கள். எனவே, அவர்களை விட்டு (நரக) தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ
திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். இன்னும், அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், அவரை (ஜிப்ரீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம். ஆக, (நம்) தூதர் எவரும் உங்களிடம் உங்கள் மனங்கள் விரும்பாததை கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? ஆக, (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள். இன்னும், சிலரைக் கொலை செய்தீர்கள்.
وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ
இன்னும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று (பரிகாசமாக) அவர்கள் கூறினார்கள். மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆக, மிகக் குறைவாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ
இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - அவர்களோ, நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள். ஆக, அவர்கள் அறிந்திருந்த (இந்த வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். ஆக, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக!
بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு.