بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَأُخۡرَىٰ لَمۡ تَقۡدِرُواْ عَلَيۡهَا قَدۡ أَحَاطَ ٱللَّهُ بِهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا
இன்னும் (நாடுகளில்) வேறு பலவற்றையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறான். (இப்போது) நீங்கள் அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
وَلَوۡ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوَلَّوُاْ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
நிராகரிப்பாளர்கள் உங்களிடம் போரிட்டால் (கண்டிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டி (ஓடி)யிருப்பார்கள். பிறகு, அவர்கள் (தங்களுக்கு) பாதுகாவலரையும் உதவியாளரையும் காண மாட்டார்கள்.
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا
இதற்கு முன்னர் சென்ற அல்லாஹ்வின் நடைமுறைப்படிதான் (இவர்களுடனும் அல்லாஹ் நடந்து கொண்டான்). அல்லாஹ்வின் நடைமுறையில் (எவ்வித) மாற்றத்தை(யும்) நீர் காணமாட்டீர்.
وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا
அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
هُمُ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَٱلۡهَدۡيَ مَعۡكُوفًا أَن يَبۡلُغَ مَحِلَّهُۥۚ وَلَوۡلَا رِجَالٞ مُّؤۡمِنُونَ وَنِسَآءٞ مُّؤۡمِنَٰتٞ لَّمۡ تَعۡلَمُوهُمۡ أَن تَطَـُٔوهُمۡ فَتُصِيبَكُم مِّنۡهُم مَّعَرَّةُۢ بِغَيۡرِ عِلۡمٖۖ لِّيُدۡخِلَ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ لَوۡ تَزَيَّلُواْ لَعَذَّبۡنَا ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمًا
(மக்காவின் குறைஷிகளாகிய) அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் (அல்லாஹ்வை பரிசுத்தமாக வணங்குவதையும் உமது தூதுத்துவத்தையும்) நிராகரித்தார்கள்; இன்னும், புனிதமான மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியை – அது தனது இடத்திற்கு (சென்று) சேர்வதையும் - அவர்கள் தடுத்தார்கள். இன்னும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்திருந்தால் (நீங்கள் அந்த மக்காவாசிகளை தாக்கும்படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிடுவதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் - கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்து நிராகரிப்பாளர்களை விட்டு) நீங்கி இருந்திருந்தால் அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை துன்புறுத்தும் தண்டனையால் தண்டித்திருப்போம்.
إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
لَّقَدۡ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءۡيَا بِٱلۡحَقِّۖ لَتَدۡخُلُنَّ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَۖ فَعَلِمَ مَا لَمۡ تَعۡلَمُواْ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتۡحٗا قَرِيبًا
திட்டவட்டமாக அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் பார்த்த) கனவை யதார்த்தத்தில் உண்மையாக நிகழ்த்திக் கொடுத்தான். அல்லாஹ் நாடினால், - பாதுகாப்பு பெற்றவர்களாக உங்கள் தலை(முடி)களை சிரைத்தவர்களாக; இன்னும், (உங்களில் சிலர்) தலை முடியை குறைத்தவர்களாக - நிச்சயமாக நீங்கள் புனிதமான மஸ்ஜிதில் நுழைவீர்கள். (அப்போது எந்த எதிரியையும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆக, (ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உள்ள நன்மைகளில்) நீங்கள் அறியாதவற்றை அவன் அறிவான். அதற்கு (-மக்காவில் உம்ராவிற்கு நுழைவதற்கு) முன்பாக சமீபமான (வேறு) ஒரு வெற்றியையும் (-ஹுதைபிய்யா உடன்படிக்கையையும் கைபர் வெற்றியையும் உங்களுக்கு) ஏற்படுத்தினான்.
هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا
அவன்தான் தனது தூதரை நேர்வழி இன்னும் உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த உண்மையான மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இன்னும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا
முஹம்மத் (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான்.